மாவலியின்
கண்கள்
------
நிலவின்
ஒளியை நீராக மாற்றும் சந்திரகாந்தம் நான்
இந்த
மலை வனத்தின் பால்யம் தொட்டு
இப்பெயரற்ற
நதிக் கரையில் கிடக்கிறேன்
பெளர்ணமி
இரவுகளில்
புலியின்
கண்களில் ஒளிரும்
இளம்
பச்சை மரகதம் என் சகோதரன்
எம்
முத்தச்சனின் குறட்டை ஒலி போல் உறுமும்
அவன்
குரலில்தான் மூங்கிலரிசிகள் விளைகின்றன
இம்மலை
எங்கும் புதைக்கப்பட்ட
எம்
மூதாதைகளின் மண்டையோடுகள்தான்
பலாக்
காய்கள்
வேண்டுமானால்
அவற்றை உடைத்துப் பாருங்கள்
உங்கள்
வரலாற்றைப் பார்த்து
அவை
உள்ளுக்குள் இளித்துக்கொண்டிருக்கும்
எம்
குடிகளின் பச்சை நரம்புகள்தான்
இவ்
வன வேர்கள் என சொல்லவும் வேண்டுமா ஈஸ