Saturday, January 21, 2012

சீசரை யார் கொன்றார்கள்




உன்முதுகில் முதல் குத்தை
கடவுள் இறக்கினார் சீசர்
பிறகு ஒன்றை மிகுந்த பாசத்துடன்
உன் தாய் தந்தாள்
உன் காதலியும்
உடன் பிறந்தவர்களும்
வெறுக்கமுடியாத நண்பனும்
வாள் எடுப்பதை பார்த்த பிறகே
உன் எதிரி எடுத்தான்
ஒரு முத்தத்திற்கு தயாராவதை
போல நீ உன் வாளுக்கு தயாரானாய்
"Et tu, Caesar,," (then Caesar die)

1 comment:

  1. //வெறுக்கமுடியாத நண்பனும்
    வாள் எடுப்பதை பார்த்த பிறகே
    உன் எதிரி எடுத்தான்
    ஒரு முத்தத்திற்கு தயாராவதை
    போல நீ உன் வாளுக்கு தயாரானாய்//

    எதிரி ஒருவன் தரும் ரணத்தை விட கொடியது அன்பானவர்களிடம் கிடைக்கும் தண்டனை.

    இதில் அழுத்தமாக உணர முடிகிறது.

    அன்புடன்,
    ஆ.கிருஷ்ணகுமார்.

    ReplyDelete