Saturday, January 31, 2009

கவிதை

குழந்தை

என் குழந்தை நேற்றிரவு திரும்பி வந்தது
என் கண்களைப் பார்த்துக் கேட்டது
எனை யார் கொன்றார்கள்
நீ பாம்பு கடித்துக் செத்தாய் மகளே
அது மீண்டும் கேட்டது
எனை யார் கொன்றார்கள்
நீ யானை மிதித்துச் செத்தாய் மகளே
அது மீண்டும் கேட்டது
எனை யார் கொன்றார்கள்
நீ காகம் தூக்கிப் போய் செத்தாய் மகளே
அது மீண்டும் கேட்டது
எனை யார் கொன்றார்கள்
நீ பூச்சாண்டி பிடித்ததால் செத்தாய் மகளே
அது மீண்டும் கேட்டது
எனை யார் கொன்றார்கள்
நீ தானாகவே செத்தாய் மகளே
நானே உனைக் கொன்றேன்
நீ சாகவே இல்லை
உண்மையில் நீ பிறக்கவே இல்லை
இங்கு எதுவும் நடக்கவே இல்லை மகளே


- ஏதும் நடக்காதது போல் பாவனை செய்யும்
என் தமிழ் சனத்தின் கள்ள மெளனத்திற்கு

3 comments:

  1. வாழ்த்துக்கள் இளங்கோ...
    எழுதுங்கள்
    ராஜா சந்திரசேகர்

    ReplyDelete
  2. வா நண்பா.. வா..

    வலை உலகினில் வரவேற்கிறேன்.

    தொடர்ந்து இயங்கு! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. kalla mounam thaan. aam. verethuvaga irukka mudiyum?

    ReplyDelete